ஜெனெசிஸ் G 90 மாடலை வெளிப்படுத்தியது ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் ஜெனெசிஸ் G 90 மாடலை தனது புதிய சொகுசு கார் பிராண்டான ஜெனெசிஸ் பிராண்டில் வெளிப்படுத்தியுள்ளது.  ஹுண்டாய் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் சொகுசு கார்களை ஜெனெசிஸ் பிராண்டில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. உலகின் சிறந்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த காராக இருக்கும் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டுக்குள் 6 மாடல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

தற்போது இந்த மாடல் EQ 900 என்ற பெயரில் கொரியாவில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 5.2 மீட்டர் நீளம் கொண்டது. வெளிப்புறம் LED முகப்பு விளக்குகள், முகப்பில் ஜெனெசிஸ் எம்பலம் மற்றும் நேரான பக்கவாட்டு கோடுகள் என கம்பீரமான தோற்றத்தை தருகிறது. உட்புறம் மிகவும் சொகுசான அனுபவம் தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் இருப்பவர்களுக்கு தனித்தனியாக இரு டச் ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 360 Bhp திறன் கொண்ட 3.3 லிட்டர், 305 Bhp திறன் கொண்ட 3.8 லிட்டர் மற்றும் 412 Bhp திறன் கொண்ட 5.0 லிட்டர் என மூன்று விதமான பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட டார்க் கன்வெர்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பின்புற டிரைவ் சிஸ்டம் கொண்டது. மேலும் இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.