மீண்டும் வெளியிடப்படுகிறதா ஹுண்டாய் சான்ட்ரோ?

ஹுண்டாய் நிறுவனம் மீண்டும் சான்ட்ரோ காரை இந்தியாவில் வெளியிட இருப்பதாக ஆட்டோ மொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் தற்போது சவுத் கொரியாவில் சோதனை செய்யப்பட்டு கொண்டிருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கின்றன. 

மக்களிடம் சான்ட்ரோ காருக்கு அமோக அதரவு இருப்பதாலும் இன்றும் டீலர்களிடம் சான்ட்ரோ கார் தொடர்பான விசாரணை வருவதாலும் ஹுண்டாய் நிறுவனம் மீண்டும் சான்ட்ரோ காரை களமிறக்க திட்டமிட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பாடுகிறது. 

ஹுண்டாய் நிறுவனம் முதன் முதலில் சான்ட்ரோ காரை தான் 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிட்டது. அதை தொடர்ந்து சான்ட்ரோ ஜிப் டிரைவ், சான்ட்ரோ ஜிப் பிளஸ் மற்றும் சான்ட்ரோ சிங் என ஏராளமான மாடல்களை வெளியிட்டது ஹுண்டாய் நிறுவனம். இறுதியாக 2014 ஆம் ஆண்டு இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இதுவரை 13.6 லட்சம் சான்ட்ரோ கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்துள்ளது ஹுண்டாய்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.