மேம்படுத்தப்பட்ட 2018 ஹூண்டாய் i20 ஆக்டிவ் மாடலின் படங்கள்

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை i20 ஆக்டிவ் மாடலை ரூ 7.04 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் எலைட் i20 ஹேட்ச் மாடலின் அடிப்படையிலான கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த எலைட் i20 ஹேட்ச் மாடல் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில புதிய வண்ணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்

  • Base - ரூ 704,291
  • S - ரூ 766,442
  • SX - ரூ 847,860
  • SX Dual Tone - ரூ 871,622

டீசல் 

  • S - ரூ 904,675
  • SX - ரூ 986,971
  • SX Dual Tone - ரூ 1,010,987

இந்த புதிய மாடலில் புதிய முகப்பு கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புற விளக்குகள் மற்றும் பின்புற வடிவமைப்பும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் சில மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் டாப் வேரியண்டில் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 117Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் பிரௌன், சில்வர், சிவப்பு, வெள்ளை, பிரௌன் இரட்டை வண்ணம், வெள்ளை இரட்டை வண்ணம் மற்றும் ப்ளூ இரட்டை வண்ணம் என ஏழு வித வண்ணங்களில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.