ஸ்கோடா விஷன் X கான்செப்ட் மாடலின் படங்கள்

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆரம்ப நிலை விஷன் X கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக் மற்றும் கரோக் மாடல் அடிப்படையில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பெரும்பாலும் கோடியாக் மற்றும் கரோக் மாடலின் வடிவங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் கரோக் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். மேலும் கரோக் மாடலை விட சிறியதாகவும் இருக்கும். மேலும் இதன் உட்புற வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உட்புறம் எதிர்கால வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷனுடன் கூடிய டர்போ சார்ஜ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 130Bhp திறனையும் 200Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் பின்புற ஆக்ஸலில் பொருத்தித்தப்பட்டுள்ளது. மேலும் இதன் தயாரிப்பு நிலை மாடல் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களிலும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலின் பிளாட்பாரம் இந்தியாவில் ஏற்கனவே வோல்க்ஸ் வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், இந்த மாடல் கண்டிப்பாக இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.