டாடா நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடலின் படங்கள் மற்றும் விவரங்கள்

டாடா நிறுவனம் நெக்சன் காம்பேக்ட் SUV மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில்வடிவமைக்கப்பட்டது. இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும்.

ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்,  பின்புற சென்சார் மற்றும் கேமரா என  இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் AMT கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் மஹிந்திரா TUV300, போர்டு ஈக்கோ ஸ்போர்ட் மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீசா போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.