டாடா நெக்ஸன் மாடலின் படங்கள்

 நெக்ஸன் மாடல் தொடர்பான அணைத்து தொழில்நுட்ப விவரங்களையும் வெளியிட்டுவிட்டது டாடா நிறுவனம். இதே செக்மென்ட்டில் உள்ள மற்ற மாடல்களில் இல்லாத  ஏராளமான புதிய உபகரணங்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது டாடா நிறுவனம். மேலும் இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. NEXt-ON என்பதின் சுருக்கமே Nexon என பெயர்க்காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது டாடா.

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் புதிதாக ஜாகுவார் மாடலில் உள்ளது போல் கைக்கடிகாரம் போன்ற சாவி கொடுக்கப்பட்டுள்ளது. இது வேறெந்த இந்திய மாடல்களிலும் கிடையாது குறிப்பிடத்தக்கது. 

ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் AMT கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா பிரீசா மற்றும் போர்டு ஈக்கோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.