பட்ஜெட் எதிரொலியால் விலையை உயர்த்துகிறது கார் நிறுவனங்கள்

சில நாட்களுக்கு முன்பு 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதில் 10 லட்சத்திற்கு மேல் அதிகம் விலை உள்ள கார்கள் மீது 1% வரியும், சிறிய டீசல் கார்கள் மீது 2.5% வரியும் மட்டும் பெரிய டீசல் என்ஜின்  கார்கள் மீது 4% வரியும் கூடுதலாக விதிக்கப்பட்டது. மேலும் சிறிய ரக கார்கள் மீதும் 1% வரி கூடுதலாக விதிக்கப்பட்டது. தோராயமாக அணைத்து கார்களின் மீதும் குறைந்தபட்சம் 1% வரி விதிக்கப்பட்டது. அதனால் தற்போது அணைத்து கார் நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன. 

ஒரு சில கார் நிறுவனங்கள் ஏற்கனவே விலையை அதிகரித்து விட்டன. மேலும் சில கார் நிறுவனங்கள் விரைவில் அதிகரிக்க உள்ளன. 

டாட்டா, ஹுண்டாய், மாருதி சுசுகி, ஹோண்டா, மகிந்திரா, நிசான்  மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே விலையை அதிகரித்துவிட்டன. மாடல்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1% முதல் அதிகபட்சம் 5% வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.