சுதந்திர தின விழாவை ஒட்டி புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்டது மஹிந்திரா TUV300

மஹிந்திரா நிறுவனம் சுதந்திர தின விழாவை ஒட்டி புதிய பச்சை வண்ணத்தில் TUV300 மாடலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் முன்பதிவின் பேரில் மட்டுமே கிடைக்கும். வண்ணத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விலையிலும் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 

இந்த மாடல் 3 சிலிண்டெர் கொண்ட 1.5 லிட்டர் mHawk80 மற்றும் mHawk100 என்ஜின்களில் கிடைக்கிறது. இதன் mHawk80 என்ஜின்  84 Bhp  திறனையும் 230 Nm  இழுவைதிறனையும் வழங்கும். அதேபோல் mHawk100 என்ஜின் 100 Bhp  திறனையும் 240 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடனும் கிடைக்கும்.  

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் சிவப்பு ஆகிய  7 வண்ணங்களில் தற்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.