இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் DC அவன்டி மகாராஸ்ட்ராவில் வெளியிடப்பட்டது

நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு DC அவன்டி கார் மகாராஸ்ட்ர மாநிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார்  இந்தியாவிலேயே இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். காரின் வடிவத்தை வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு கஷ்டமைஸ் செய்து தருவதில் பெயர் பெற்ற நிறுவனமான DC டிசைன் நிறுவனம் தான் இந்த ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது. 

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 248 bhp திறனையும் 340 Nm இழுவைதிறனையும் கொண்டது. மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் வேகம் வரை மட்டும் செல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6 ச்ப்பெத் கொண்ட மேனுவல்  கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இந்த மாடல் மகாராஸ்ட்ராவில் 35.93 லட்சம் ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.