மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு நிசான் X-ட்ரைல் வெளிப்படுத்தப்பட்டது

நிசான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட X-ட்ரைல் மாடலை ஐரோப்பில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் தான் இந்தியாவிலும்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஏற்கனவே அமெரிக்காவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் புதிய பம்பர் புதிய கிரில் , புதிய பூமராங் லெட் முகப்பு விளக்குகள் , புதிய பனி விளக்குகள் பின்புறத்தில் புதிய லெட் விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் அடிப்புறம் தட்டையான ஸ்டேரிங் வீல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 144Bhp திறனையும் 200Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் இந்தியாவில் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.