அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்கோடா கரோக் காம்பேக்ட் SUV

ஸ்கோடா நிறுவனம் சுவீடனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோக் காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எட்டி மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் புதிய MQB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதிய மற்றும் எளிதில் மாற்றக்கூடிய பிளாட்பாரம் ஆகும். இதே பிளாட்பார்மில் தான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் சில கார்களும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கோடியாக் SUV மாடலின் அடிப்படையில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறிய கோடியாக் SUV போல தான் தோற்றமளிக்கிறது. முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4382mm நீளமும், 1841mm அகலமும் மற்றும் 1605mm உயரமும் கொண்டது. மேலும் இந்த மாடல் 200 மில்லி மீட்டர் தரை இடைவெளியும் கொண்டது. உட்புறத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம்,  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , ட்யூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், லேன் அசிஸ்ட் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டது. இந்த மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் மற்றும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். இவை அனைத்தும் ஆறு ஸ்பீட் மேனுவல் அல்லது ஏழு ஸ்பீட் DSG ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும்.  இந்த வருட இறுதிக்குள் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும். எனினும் இந்தியாவில் இந்த மாடல் அடுத்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் ஸ்கோடா நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் கோடியாக் SUV  மாடலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.