குளோபல் NCAP சிதைவு சோதனையில் 0 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது இந்திய கார்கள்

குளோபல் NCAP சிதைவு  சோதனை மையம் இந்தியாவின் செளிரியோ, க்விட், ஈக்கோ, இயான் மற்றும் ஸ்கார்பியோ கார்களை சோதனை செய்தது. இந்த அனைத்து கார்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0 ஸ்டார் தர மதிப்பீட்டை மட்டுமே பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் செளிரியோ தவிர மற்ற கார்கள் 2  ஸ்டார் தர மதிப்பீட்டையும் செளிரியோ 1 ஸ்டார் தர மதிப்பீட்டையும் மட்டுமே பெற்றது. இதற்கு முன்னால் இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனைகளிலும்  நிறைய இந்திய கார்கள்  0 ஸ்டார் தர மதிப்பீட்டையே பெற்றது. 

இந்த சோதனையில் இந்த கார்களின் பேஸ் வேரியன்ட் பயன்படுத்தப்பட்டது. அதாவது  காற்றுப்பை இல்லாத வேரியன்ட் தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. க்விட் கார் மாட்டும் காற்றுப்பை உடனும்  இல்லாமலும் என இரண்டு மாடல் சோதனை செய்யப்பட்டது. மேலும் பாடி செல்லின் உறுதித்தன்மையும் சோதனை செய்யப்பட்டது.

இது குறித்து குளோபல் NCAP சிதைவு  சோதனை மைய செயலாளர் கூறும் போது, இந்திய கார் நிறுவனங்கள் பாடி செல்லின் உறுதித்தன்மையை அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு காற்றுப்பைகளையாவது கட்டாயமாக்க வேண்டும். ரெனால்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இது போன்ற தரம் குறைந்த கார்களை வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. உலகில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களும் இனிமேல் குறைந்தபட்ச சோதனைகளில் வெற்றிபெறும் கார்களை மட்டும் தயாரிக்கும் என நம்புவதாகவும். கார் நிறுவனங்கள் தானாக முன் வந்து 0 ஸ்டார் தர மதிப்பீடு உள்ள கார்களை விற்பனையில் இருந்து நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். 

பெரும்பாலான நாடுகளில் சிதைவு சோதனைகளுக்கென கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த ஒரு கட்டுப்படும் இல்லை. 2017 ஆம் ஆண்டு Bharat New Car Assessment Programme எனும் புதிய கட்டுப்பாடு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.