இஸுசு D-மேக்ஸ் V-கிராஸ் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

இஸுசு இந்தியா நிறுவனம் D-மேக்ஸ் V-கிராஸ் மாடலின் முன்பதிவை இந்தியாவில் தொடங்கியது. ரூ. 50,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு  செய்து கொள்ளலாம். சில நாட்களுக்கு முன்புதான் இந்த மாடலை ரூ.12.51 லட்சம் ஷோ ரூம் விலையில் வெளியிட்டது. ஜூலை மாதம் முதல் விநியோகம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 2.5 லிட்டர் 4 சிலிண்டெர் டர்போ டீஸல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 134 Bhp  திறனையும் 320 Nm  இலுவைதிரனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலுமிந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். ABS  மற்றும் EBD  போன்றவையும் இந்த மாடலில் கிடைக்கும். 

டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், தானியங்கி குளிரூட்டி, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு மற்றும் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு என ஏராளமான சொகுசு வசதிகள் கிடைக்கும். சிறந்த ஆப் ரோடு மற்றும் சிறந்த சொகுசு வசதி என இரண்டையும் ஒரே மாடலில் விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.