ரூ 23.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது இஸுசு MU-X

இஸுசு இந்தியா நிறுவனம் ரூ 23.99 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில்  MU-X மாடலை வெளியிட்டுள்ளது. D-மேக்ஸ் V-கிராஸ் மாடலின் பாகங்கள் அதிகமாக இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் MU-7 மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்: 
Isuzu MU-X 4x2: ரூ 23.99 லட்சம் 
Isuzu MU-X 4x4: ரூ 25.99 லட்சம்

இந்த மாடல் 3.0 லிட்டர் 4 சிலிண்டெர் டர்போ டீஸல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 177 Bhp  திறனையும் 380 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 13.8kmpl மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 220 மில்லிமீட்டர் தரை இடைவெளி கொண்டது.

இந்த மாடல் வெள்ளை, பிரவுன், கருப்பு மற்றும் சில்வர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்சன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ABS, EBD, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் DVD மானிடர், 8 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்,  ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டொயோடா பார்ச்சுனர், போர்டு எண்டவர் மற்றும் செவ்ரோலெட் ட்ரைல்பிளேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.