இந்தியாவில் வெளியிடப்பட்டது ரேஞ் ரோவர் ஆட்டோபையோகிராபி சிறப்பு பதிப்பு

ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் ரேஞ் ரோவர் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலான ரேஞ் ரோவர் ஆட்டோபையோகிராபி மாடலை ரூ 2.8 கோடி விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் லாங் வீல் பேஸ் கொண்ட ரேஞ் ரோவர் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஞ் ரோவர் ஆட்டோபையோகிராபி மாடல் லேன்ட் ரோவர் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட கஸ்டமைஸ் மாடல் ஆகும். இந்த மாடல் கருப்பு மற்றும் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும். இந்த மாடலில் ஏராளமான கஸ்டமைஸ் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 5.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 4.4 லிட்டர்  டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் 543bhp திறனையும் டீசல் மாடல் 335bhp திறனையும் வழங்கும். 

இந்த மாடலை இந்தியாவில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய ரேஞ் ரோவர் ஆட்டோபையோகிராபி சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் வெறும் ஐந்து எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.