வெளிப்படுத்தப்பட்டது ஜாகுவார் E-பேஸ் SUV

ஜாகுவார் நிறுவனம் ஆரம்ப நிலை SUV மாடலான புத்தம் புதிய E-பேஸ் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் F-பேஸ் SUV மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சிறிய மாடல் ஆகும். ஜாகுவார் நிறுவனம் நீண்ட வருடமாக செடான் மாடல்களை மட்டுமே தயாரித்து வந்தது. சில வருடங்களுக்கு முன்பு F-பேஸ் SUV மாடலை வெளியிட்டது. அதை தொடர்ந்து I-பேஸ் எலெக்ட்ரிக் SUV மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது ஆரம்ப நிலை SUV  மாடலான E-பேஸ் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மாடல் F-பேஸ் SUV மாடலின் வடிவங்களை அப்படியே கொண்டுள்ளது. அளவில் மட்டும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் F-பேஸ் SUV மாடலில் உள்ள அனைத்து வசதிகளும் உபகரணங்களும் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 12.3 இன்ச் இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடன் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு தோராயமாக ரூ 50 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.