ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் படத்திற்கான பிரத்தியேக கார்களை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது ஜகுவார்

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 24 வது படமான ஸ்பெக்டர் படத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கார்களை ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நஓமி ஹாரிஸ் , நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் டேவிட் பாடிஸ்டா மற்றும் பாடகர் ஜான் நேவ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நஓமி ஹாரிஸ் கூறும் போது இந்த படத்தில் நான் டிபென்டர் காரில் தார் அறிமுகம் ஆவேன் என்றும் இந்த படத்தில் நடித்து இனிமையான அனுபவம் என்றும் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்துடன் சேர்த்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி என்று   கூறினார். 

நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் டேவிட் பாடிஸ்டா கூறும் போது இந்த படத்தில் வரும் பாண்டுடன் மோதும்  ஒரு சேசிங் காட்சியில் C-X75 சூப்பர் காரை ஒட்டியதன் மூலம் எனது கனவு நனவானது என்றும், இந்த கார் மிக சிறப்பானது என்றும் கூறினார்.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில படங்கள் 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.