I-பேஸ் எலெக்ட்ரிக் SUV மாடலை வெளிப்படுத்தியது ஜாகுவார்

ஜாகுவார் நிறுவனம் புதிய I-பேஸ் எனும்  எலெக்ட்ரிக் SUV  கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடலை வெளிப்படுத்தியுள்ளது.  I-பேஸ் எலெக்ட்ரிக் SUV மாடலை இந்த மாதம் நடைபெறும் 2018 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் கான்செப்ட் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் டிசைன்  F-பேஸ்  மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால்  இந்த மாடல் F-பேஸ்  மாடலை விட சிறப்பான தோற்றத்தை தருகிறது.

இந்த மாடலில் 200Bhp திறனும் 350Nm இழுவைத்திறனும் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் இரண்டு ஆக்சில்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த மாடல் 400Bhp திறனையும் 700Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இந்த மாடலில் 90KW லித்தியம்- அயர்ன் பேட்டரி அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தாராளமான இட வசதி கிடைக்கும்.

இந்த பேட்டரியை 80% சார்ஜ் செய்ய 1.5 மணி நேரமும் முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரமும்  ஆகும். உட்புறம் மற்ற ஜாகுவார் மாடல்களில் இருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4682 மில்லிமீட்டர் நீளமும், 2139 மில்லிமீட்டர் அகலமும், 1565 மில்லிமீட்டர் உயரமும் மற்றும் 2990 மில்லிமீட்டர் வீல்பேசும் கொண்டது. இந்த மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. மேலும் இதன் விநியோகம் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.