வெளிப்படுத்தப்பட்டது புதிய ஜாகுவார் XE SV ப்ராஜெக்ட் 8

ஜாகுவார் நிறுவனம் அதிக திறன் கொண்ட புதிய XE SV ப்ராஜெக்ட் 8 மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் தான் இதுவரை வெளிவந்த ஜாகுவார் மாடல்களிலேயே அதிக திறன் கொண்ட தயாரிப்பு நிலை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ஜாகுவார் நிறுவனத்தின் SVO (Special Vehicle Operations) பிரிவில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வெறும் 300 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும்.

இந்த மாடலில் F-Type மாடலில் உள்ள 5.0 லிட்டர் V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலில் 592Bhp திறனையும் 700Nm இழுவைத்திறனையும் வழங்கும் அளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறன் Q-ஷிபிட் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.3 வினாடிகளுக்குள் கடந்து விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 321 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் தான் ஜாகுவார் மாடல்களிலேயே அதிக ஆக்சிலரேட்டிங் கொண்ட மாடல் ஆகும்.

இந்த மாடல் இன்று (ஜூன் 30) இங்கிலாந்தில் நடைபெறும் குட் வுட் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மாடல் நான்கு இருக்கை மற்றும் இரண்டு இருக்கை கொண்ட ட்ராக் வெர்சன் என இரண்டு விதங்களில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.