பிப்ரவரி 3 அன்று டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படுகிறது ஜகுவார் - XE

ஜகுவார் நிறுவனம்  பிப்ரவரி 3 அன்று டெல்லி வாகன கண்காட்சியில் ஜகுவார் - XE மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இதன் முன்பதிவு தற்போது அனைத்து ஷோ ரூம்களிலும் நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணமாக ரூ.1 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இது ஜகுவார் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் இரண்டு விதமான திறன்களில் கிடைக்கும். இது 200 Bhp மற்றும் 240 Bhp என இரண்டு வித திறன்களில் கிடைக்கும். இந்த மாடலில் ஜகுவார் நிறுவனத்தின் அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும்.

இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் C - கிளாஸ், BMW 3 சிரீஸ் மற்றும் ஆடி A 4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.