வெளிப்படுத்தப்பட்டது ஜாகுவார் XF ஸ்போர்ட்பிரேக்

ஜாகுவார் நிறுவனம் XF சலூன் மாடலின் எஸ்டேட் வெர்சனான XF ஸ்போர்ட்பிரேக் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் B-பில்லர் XF சலூன் மாடல் போல் தான் உள்ளது அதற்கு பிறகு தான் எஸ்டேட் போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் சஸ்பென்ஷன் சிஸ்டமும் மாற்றப்பட்டுள்ளது. 

LED முகப்பு விளக்குகள், 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன் ரூப் என XF சலூன் மாடலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று விதமான என்ஜின்களில் ஆறு ஸ்பீட் மேனுவல் அல்லது எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய இன்ஜெனியம் என்ஜினிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் ஆள் வீல் டிரைவ் சிஸ்டம், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிடரிங் சிஸ்டம் மற்றும் லேன் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கிடைக்கும். இந்த மாடல் BMW 5 சீரிஸ் டூரிங், மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் எஸ்டேட் மற்றும் வோல்வோ V90 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.