இந்தியாவில் ரூ.98.03 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஜகுவார் XJ

ஜகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் ரூ.98.03 லட்சம் மும்பை ஷோரூம்  ஆரம்ப விலையில் ஜகுவார் XJ  மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முகப்பு விளக்கு முழுவதுமாக LED விளக்காக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் பின்புறமும் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்போடைன்மென்ட் சிஸ்டமும் மாற்றப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.இதன் பெட்ரோல் என்ஜின் 237 bhp (5500 rpm) திறனும் 340Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இதன் டீசல் என்ஜின்  மாடல் 271 bhp (4000 rpm) திறனும் 600Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

வேரியன்ட் வாரியாக விலை விவரங்கள் (மும்பை ஷோரூம்)

ஜகுவார் XJ LUXURY - பெட்ரோல் - ரூ.98.03 லட்சம் 

ஜகுவார் XJ PORTFOLIO - பெட்ரோல்- ரூ.99.203 லட்சம் 

ஜகுவார் XJ LUXURY - பெட்ரோல் - ரூ.98.03 லட்சம் 

ஜகுவார் XJ PORTFOLIO - பெட்ரோல்- ரூ.1.05 கோடி 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.