ரூ 14.95 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஜீப் காம்பஸ்

ஜீப் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ் மாடலை ரூ 14.95 லட்சம் என்ற மிகச்சவாலான டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் கடந்த ஆண்டு பிரேசிலில் வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் ஜீப் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.  இந்த மாடல் மொத்தம் 10 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன் விலை விவரங்களை கீழே பார்க்கலாம்.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

பெட்ரோல்:
Sport: ரூ 14.95 லட்சம்

Limited AT: ரூ 18.70 லட்சம்

Limited AT (O): ரூ 19.40 லட்சம்

டீசல்:
Sport: ரூ 15.45 லட்சம்

Longitude: ரூ 16.45 லட்சம்

Longitude (O): ரூ 17.25 லட்சம்

Limited: ரூ 18.05 லட்சம்

Limited (O): ரூ 18.75 லட்சம்

Limited 4x4: ரூ 19.95 லட்சம்

Limited 4x4 (O): ரூ 20.65 லட்சம்

 

தோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.

இந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 162Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் என்ஜின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். மற்றும் டீசல் மாடல் மேனுவல் கியர் பாக்சில் மட்டுமே கிடைக்கும்.  அதேபோல்  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இத்துடன் ஆட்டோ, ஸ்னோ, சேன்ட் மற்றும் மட் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் கூடிய டீசல் மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 178mm தரை இடைவெளி கொண்டது. இந்த மாடலில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த மாடலில் ஆறு காற்றுப்பை, ABS, EBD, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏழு இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா  என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.