வெளியிடப்பட்டது கூடுதல் வசதிகள் கொண்ட ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் வேரியன்ட்

ஜீப் நிறுவனம் கூடுதல் வசதிகள் கொண்ட ஜீப் காம்பஸ் மாடலின் லிமிடேட் பிளஸ் வேரியன்ட்டை ரூ 21.12 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வேரியன்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் லிமிடேட் வேரியன்ட்டை விட  எட்டு விதமான கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் வேரியன்ட் மாடலின் சென்னை ஷோரூம் விலை விவரம்:

 • ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் 2.0 டீசல் (4x2) - ரூ 21.12 லட்சம் 
 • ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் 2.0 டீசல் (4x4) - ரூ 22.89 லட்சம் 
 • ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் 1.4 பெட்ரோல் (AT) - ரூ 21.46 லட்சம் 

ஜீப் காம்பஸ் லிமிடேட் பிளஸ் வேரியன்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

 • பனோராமிக் சன் ரூப்
 • உயரம் மாற்றக்கூடிய எலெக்ட்ரிக் ஓட்டுநர் இருக்கை
 • 8.4-இன்ச் U-கனக்ட் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 
 • ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
 • புதிய 18-இன்ச் இரட்டை வண்ண அலாய் வீல் 
 • ஆறு காற்றுப்பை 
 • ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் வைப்பார் 
 • ஆட்டோ டிம்மிங் பின்புற கண்ணாடி

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 162Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் என்ஜின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும் மற்றும் டீசல் மாடல் மேனுவல் கியர் பாக்சில் மட்டுமே கிடைக்கும். அதேபோல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இத்துடன் ஆட்டோ, ஸ்னோ, சேன்ட் மற்றும் மட் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.