ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் புதிய ஜீப் காம்பஸ்

ஜீப் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ் மாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாடல் முதலில் கடந்த ஆண்டு பிரேசிலில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் ஜீப் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV  போன்ற தோற்றத்தை தருகிறது.

நிறைய விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த மாடல் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வெளியிடப்படலாம். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒன்பது ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் தோராயமாக ரூ.25 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.