இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் ஜீப் ரெனெகெட்

2012 ஆம் ஆண்டே ஃபியட்  நிறுவனம் வெளி நாட்டு பிராண்டுகளை இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு தான் அபாரத் பிரண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜீப் பிராண்டும் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதேபோல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் செரோக்கி மற்றும்  வ்ரேங்க்ளர்  காட்சிப்படுதியதுடன் இந்த ஆண்டு மத்தியில் இந்த இரண்டு மாடல்களும் வெளியிடப்படும் என அறிவித்தது. ஆனால் ரெனெகேட் மாடல் பற்றி தகவலேதும் வெளியிடவில்லை.

ஃபியட்  நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் தான் ஜீப் பிராண்டில் விலை குறைந்த மாடலாகவும் இருக்கும். இந்த மாடல் 17 முதல் 20 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் diesel என்ஜினில் கிடைக்கும். மேலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 9 ஸ்பீட் automatic கியர் பாக்ஸிலும் கிடைக்கும்.

பியட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அபார்த், மசராட்டி மற்றும் பெர்ராரி பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஜீப் பிராண்டும் அதில் இனைய உள்ளது. ஜீப் நிறுவனம் உலக அளவில் SUV  மற்றும் ஆப் ரோடு வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். ஜீப் மாடல்கள் முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.