ரூ. 5.01 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது லம்போர்கினி அவென்டடர் S

லம்போர்கினி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அவென்டடர் S மாடலை ரூ. 5.01 கோடி ஷோ ரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒரு சில ஒப்பனை மற்றும் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஏரோடைனமிக்கை மேம்படுத்த முன்புற மற்றும் பின்புற பம்பர் ஏர் இன்டேக் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. புகைபோக்கி வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் அதே 6.5 லிட்டர் V12 எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 740 Bhp திறனையும் 690 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.  ஏழு ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் மூலம் நான்கு வீலுக்கும் திறன் கடத்தப்படுகிறது. இந்த 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 350  கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 

குறிப்பாக இந்த மாடலில் முதன் முறையாக நான்கு வீலையும் ஸ்டேரிங் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைத்த வேகத்தில் இருக்கும் போது பின்புற வீல் ஏத்தி திசையிலும் அதிக வேகத்தில் இருக்கும் போது ஒரே திசையிலும் திரும்பும். இதன் மூலம் அதிக வேகத்தில் வளைவான சாலைகளில் மிகச்சிறந்த கையாளுமையை வழங்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.