ரூ. 3.97 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் பெர்பார்மண்ட்

லம்போர்கினி நிறுவனம் ஹுரகேன் சீரீஸில் அதிக திறன் கொண்ட ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடலை இந்தியாவில் ரூ. 3.97  கோடி டெல்லி ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4, LP580-2, ஹுரகேன் ஸ்பைடர் 4WD, ஹுரகேன் ஸ்பைடர் RWD மற்றும் ஆவியோ சிறப்பு பாதிப்பு என  ஐந்து வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது.  ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடல்  ஹுரகேன் சீரீஸிலேயே அதிக திறன் கொண்ட மாடல் ஆகும்.

இந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 631 Bhp திறனையும் 600 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 325 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இதன் திறன் ஏழு ஸ்பீட் டூயல் கிளட்ச் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. இதன் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த மாடலின் என்ஜினில் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை கூடுதலாக இதன் எடையும் 40 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரேம் ஹைபிரிட்  அலுமினியம் மற்றும் கார்பன் பைபரால் செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.