ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் லம்போர்கினி ஹுரகேன் பெர்பார்மண்ட்

லம்போர்கினி நிறுவனம் ஹுரகேன் சீரீஸில் அதிக திறன் கொண்ட ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடலை இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4, LP580-2, ஹுரகேன் ஸ்பைடர் 4WD, ஹுரகேன் ஸ்பைடர் RWD மற்றும் ஆவியோ சிறப்பு பாதிப்பு என  ஐந்து வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது.  ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடல்  ஹுரகேன் சீரீஸிலேயே அதிக திறன் கொண்ட மாடல் ஆகும்.

இந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 631 Bhp திறனையும் 600 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 325 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடலின் என்ஜினில் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை கூடுதலாக இதன் எடையும் 40 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரேம் ஹைபிரிட்  அலுமினியம் மற்றும் கார்பன் பைபரால் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் தோராயமாக ரூ. 4 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.