ரூ. 3.45 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் ஸ்பைடர் RWD

லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ரூ.3.45 கோடி விலையில்  ஹுரகேன் ஸ்பைடர் RWD மாடலை வெளியிட்டுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4, LP580-2, ஹுரகேன் ஸ்பைடர் 4WD மற்றும் ஆவியோ சிறப்பு பாதிப்பு என  நான்கு வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது  ஹுரகேன் ஸ்பைடர் RWD  எனும்  ஐந்தாவது மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் RWD கூப் மாடலின் கன்வெர்ட்டிபிள் மாடல் ஆகும்.

இந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 580 Bhp திறனையும் 540 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 319 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடலின் மேற்கூரையை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். அதுவும் வெறும் 17 வினாடிகளுக்குள் அதை செய்து விடலாம். போர்ச்சே 911 கன்வெர்ட்டிபிள், பெர்ராரி கலிபோர்னியா மற்றும் ஆஷ்டன் மார்ட்டின் V12 போன்ற மாடல்களுக்கு போட்டியாக  இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.