இந்தியாவில் வெளியிடப்பட்டது லம்போர்கினி உரஸ் SUV

உலகில் புகழ் பெற்று விளங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, உரஸ் ஹைப்பர் SUV மாடலை உலகளவில் வெளியிட்டு சில நாட்களே ஆனா நிலையில் தற்போது ரூ 3 கோடி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் கான்செப்ட் மாடல் 2012 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது லம்போர்கினி நிறுவனத்தின் இரண்டாவது SUV ஆகும்.

இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 641Bhp @6000rpm திறனையும் 850Nm @2250-4500rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் திறன் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்தமாடலில் பல வித டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர்  வேகத்தை வெறும் 3.6 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 305 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்  வல்லமை கொண்டது.

நான்கு இருக்கை அமைப்பு கொண்டதாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்ற லம்போர்கினி மாடல்கள் போலவே ஏராளமான சொகுசு வசதிகள் மற்றும் உபகரணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடளுக்காக ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.