வெளிப்படுத்தப்பட்டது லம்போர்கினி உரஸ் SUV

உலகில் புகழ் பெற்று விளங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி இறுதியாக உரஸ் ஹைப்பர் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இதன் கான்செப்ட் மாடல் 2012 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது லம்போர்கினி நிறுவனத்தின் இரண்டாவது SUV ஆகும்.

இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 621Bhp திறனையும் 850Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் திறன் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்தமாடலில் பல வித டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

நான்கு இருக்கை அமைப்பு கொண்டதாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்ற லம்போர்கினி மாடல்கள் போலவே ஏராளமான சொகுசு வசதிகள் மற்றும் உபகரணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடளுக்காக ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் தகவல்களை பெற மௌவளுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.