ரூ 68.05 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லேன்ட் ரோவர் டிஸ்கவரி

லேன்ட் ரோவர் நிறுவனம் உலகின் சிறந்த ஆப் ரோடு மாடல்களில் ஒன்றான டிஸ்கவரியின் ஐந்தாம் தலைமுறை மாடலை ரூ 68.05 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் மொத்தம் 10 வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:
3.0l S - ரூ 68.05 லட்சம்
3.0l SE - ரூ 71.15 லட்சம்
3.0l HSE - ரூ 74.23 லட்சம்
3.0l HSE Luxury - ரூ 78.91 லட்சம்
3.0l First Edition - ரூ 84.43 லட்சம்

டீசல்:
3.0l S - ரூ 78.37 லட்சம்
3.0l SE - ரூ 85.30 லட்சம்
3.0l HSE - ரூ 89.54 லட்சம்
3.0l HSE Luxury - ரூ 95.47 லட்சம்
3.0l First Edition - ரூ 1.03 கோடி

டிஸ்கவரி மாடலின் பாக்சி வடிவமைப்பில் இருந்து இந்த மாடல் சற்று மாற்றப்பட்டுள்ளது. எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களின் பாகங்கள் அதிகம் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் சன் ரூப், ஆட்டோமேட்டிக் ரைன் சென்சிங் வைப்பர், LED முகப்பு விளக்குகள், 14 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் என ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 340Bhp திறனையும் 450Nm இழுவைத்திறனையும் வழங்கும் அதேபோல் டீசல் எஞ்சின் 258Bhp திறனையும் 600Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களும் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, ஆடி Q7, BMW X5 மற்றும் வோல்வோ XC90 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.