லேன்ட் ரோவர் மாடல்களின் விலை அதிரடி குறைப்பு

டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான லேன்ட் ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ் ரோவர் எவோக் மாடல்களின் விலையை முறையே ரூ 4 லட்சம் மற்றும் ரூ 3 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு செய்துள்ளது. அணைத்து நிறுவனங்களும் விலையை அதிகரிக்கும் போது லேன்ட் ரோவர் நிறுவனம் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் மாடலுக்கு தோராயமாக ரூ 30 லட்சம் வரையும் ரேஞ் ரோவர் வோக் மாடலுக்கு தோராயமாக ரூ 50 லட்சம் வரையும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் எவோக் மாடலில் புதிய 2.0 இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான் ஜாகுவார் XF  மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 bhp திறனையும் 430 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக  மணிக்கு 195 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் 2.2 லிட்டர் என்ஜினில் TD4 மற்றும் SD4 என இரண்டு வித திறனிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும். 2.2 லிட்டர் TD 4 எஞ்சின் 150 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும் 2.2 லிட்டர் SD 4 190 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும் வழகும். மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 237 bhp திறனையும் 340 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த விலை குறைப்பு லேன்ட் ரோவர் மாடலின் விற்பனையை அதிகரிக்க உதவும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.