ரூ 59.13 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது லெக்சஸ் ES 300h

லெக்சஸ் நிறுவனம் ஏழாம் தலைமுறை ES 300h செடான் மாடலை இந்தியாவில் ரூ 59.13 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முற்றிலும் புதிய K (GA-K) பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. டொயோடா நிறுவனம் கடந்த வருடம் தான் இந்தியாவில் லெக்சஸ் பிராண்ட் சொகுசு கார்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் BSVI மாசுக்கட்டுப்பாடு கொண்ட  2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மின் மோட்டோரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 178 Bhp திறனையும் 213 Nm இழுவைத்திறனையும் மற்றும் இதன் மின் மோட்டார் 119 Bhp திறனையும் 270 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் e-CVT ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் முன் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 22.37 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடலிலும் மற்ற லெக்சஸ் மாடல் போலவே அனைத்து விதமான சொகுசு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலும் முந்தய மாடல் போலவே CBU (completely built unit) மூலமே வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல்  ஆடி A6, BMW 5 சீரிஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ், வோல்வோ S90 மற்றும் ஜாகுவார்  ஸ்ப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.