ரூ 2.32 கோடி விலையில் வெளியிடப்பட்டது லெக்சஸ் LX 450d

டொயோடா நிறுவனம் ரூ 2.32 கோடி டெல்லி ஷோரூம் விலையில் லெக்சஸ் LX 450d SUV  மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. டொயோடா நிறுவனம் லெக்சஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போதே   RX 450h மற்றும்  ES 300h மாடல்களுடன் LX 450d மாடலையும் காட்சிப்படுத்தியது. ஆனால் விலை விவரங்களை வெளியிடவில்லை தற்போது தான் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் விலை உயர்ந்த லெக்சஸ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் டொயோடா லேன்ட் குரூஸர் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உட்புற வடிவமைப்பு, வெளிப்புற வடிவமைப்பு மற்றும் வசதிகள் என அனைத்திலும் மிக பிரமாண்டமாகவும் சொகுசாகவும் இந்த மாடல் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்த மாடலில் 19  ஸ்பீக்கர் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 4.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 270 Bhp  திறனையும் 650  Nm இழுவைத்திறனையும்  வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. 3.3 டன் எடை கொண்ட இந்த பெரிய SUV 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.1 வினாடிகளில் கடந்து விடும். மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.