MG ஹெக்டர் மாடலின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வெளியிட இருக்கும் தனது முதல் SUV மாடலான ஹெக்டர் மாடலின் அதிகாரப்பூர்வமான படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் தொடர்பான விவரங்களையும் MG மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டர்  SUV மாடலை சோதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் இந்த வருட மத்தியில் வெளியிடப்படும் என ஏற்கனவே  MG மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் Baojun 530 எனும் மாடலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள், தோல் இருக்கை, பேனரோமிக் சன் ரூப், LED பின்புற விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 10.4-இன்ச் செங்குத்தான டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் இணைய வசதிக்காக ஒரு சிம் பொருத்தப்பட்டிருக்கும், இதன் மூலம் எளிதாக அணைத்து மேம்பாடுகளையும் எளிதாக செய்ய முடியும். மேலும் இந்த இன்போடைன்மெண்ட்ஸ் சிஸ்டத்தில் நிகழ் நேர டிராபிக் என ஏராளமான வசதிகள் உள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல் மற்றும் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் மாடலில் அதே  2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தான் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கும், இந்த எஞ்சின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல்கள் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG ஹெக்டர் மாடல் இந்தியாவில் தோராயமாக ரூ 30 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.