இந்தியாவில் வெளியிடப்படும் தனது முதல் SUV மாடலின் பெயரை வெளியிட்டது MG மோட்டார்

MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வெளியிட இருக்கும் தனது முதல் SUV மாடலின் பெயரை ஹெக்டர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஒரு SUV மாடலை சோதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் இந்த வருட மத்தியில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது MG மோட்டார்.

இந்த மாடல் Baojun 530 எனும் மாடலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை தேர்வுகளில் தோராயமாக ரூ 15 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவை சேர்ந்த SAIC நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்குவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மிகப்பழமையான கார் பிராண்டான மோரீஸ் கராஜஸ் எனும் பிரண்டில் தான் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்க இருப்பதாகவும் SAIC நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மோரீஸ் கராஜஸ் என்பது பிரிட்டன் நாட்டை சேர்ந்த பழமையான கார் நிறுவனம். 1925 ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பல மாற்றங்களுக்கு பிறகு 2005 ஆம் ஆண்டு நாஞ்சிங் ஆட்டோமொபைல் குழுமம் இந்நிறுவனத்தை கையக்கப்படுத்தியது. அதன் பிறகு நாஞ்சிங் குழுமம் ஷாங்காய் ஆட்டோமோடிவ் கார்ப்பரேஷன் உடன் இணைந்தால் இந்நிறுவனமும் SAIC நிறுவனத்தின் கீழ் வந்தது. மேலும் இது தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.