இத்தாலியை சேர்ந்த ஃபினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியது மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து இத்தாலியை சேர்ந்த புகழ் பெற்ற டிசைன் நிறுவனமான ஃபினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஃபினின்ஃபரினா நிறுவனம் பெர்ராரி, ஆல்பா ரோமியோ மற்றும் மசராட்டி போன்ற நிறுவனங்களுக்கு கார்களை வடிவமைத்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து ஃபினின்ஃபரினா நிறுவனத்தின் 76.06% பங்குகளை தனதாக்கியுள்ளது. இதில் 60% பங்குகளை டெக் மஹிந்திரா நிறுவனமும் 40% பங்குகளை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் வாங்கியுள்ளது. 

இது குறித்து ஆனந்த் மகிந்திரா கூறும் போது, ஃபினின்ஃபரினா நிறுவனம் மூலம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மதிப்பு உயரும் எனவும் மேலும் மகிந்திரா நிறுவனத்தின் டிசைன் திறனும் பல மடங்கு கூடும் என்று கூறினார்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.