மகிந்திரா - கஸ்டோவின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டது

மகிந்திரா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு கஸ்டோவின் ஸ்பெஷல் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் வண்ணங்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இரட்டை வண்ண கலவையில் கிடைக்கும். என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 109.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  

இதன் பெட்ரோல் என்ஜின்  8.0 bhp (7500rpm)   திறனும் 9 NM (5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 61 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.    

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.