நாளை வெளியிடப்படும் மகிந்திரா - KUV100

மகிந்திரா நிறுவனம் நாளை KUV100 எனும் புதிய SUV மாடலை வெளியிடுகிறது. இந்த மாடல் மினி SUV எனும் புதிய செக்மென்டையே உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. KUV என்ற பெயருக்கு கூல் யுடிலிட்டி வெஹிகிள் என்று அர்த்தமாம். மேலும் இந்த மாடலை கே யு வி 1 ஒ ஒ என்று உச்சரிக்க வேண்டும். 

இது மிகவும் அழகான மற்றும் கம்பீரமான் வெளிப்புற தோற்றம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சிறிய குரோம் கிரில் என அருமையான தோற்றத்தை தருகிறது. இரண்டாம் வரிசை  கதவுக்கான கைப்பிடி விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு சிறிய  XUV 500 மாடலை போல் தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் இந்த மாடலில் 1.2 லிட்டர் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. mFALCON  1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 Bhp திறனையும் 114 Nm இழுவைதிறனையும் வழங்கும். mFALCON  1.2 லிட்டர் டீசல் எஞ்சின் 77 Bhp திறனையும் 109 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினுமே 1198 cc கொள்ளளவு கொண்டது.

மகிந்திராவின் TUV 300 மாடல் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இந்த புதிய  KUV 100 மாடலும் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்த மாடலின் விலை தொடர்பான விவரங்கள் நாளை தெரிந்து விடும். மேலும் தகவல்களை பெற மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.