ரூ 4.43 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா KUV100 NXT

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய  KUV100 NXT மாடலை ரூ 4.43 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுத்து இந்த புதிய KUV100 NXT மாடலை வெளியிட்டுள்ளது. இதன் முந்தய மாடலை வெளிட்டு இரண்டு வருடத்திற்குள்ளாகவே புதிய மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் மஹிந்திரா KUV100 NXT மாடலை விலை:
பெட்ரோல்

 • K2 6 Str - ரூ 443107
 • K2 + 6 Str - ரூ 482629
 • K4 + 5 Str - ரூ 521286
 • K4 + 6 Str - ரூ 527683
 • K6 + 5 Str - ரூ 601746
 • K6 + 6 Str - ரூ 608123
 • K8 5 Str - ரூ 638030
 • K8 6 Str - ரூ 644406
 • K8 6 Str Dual Tone - ரூ 651906

டீசல் 

 • K2 6 Str - ரூ 543171
 • K2 + 6 Str - ரூ 567459
 • K4 + 5 Str - ரூ 608972
 • K4 + 6 Str - ரூ 615414
 • K6 + 5 Str - ரூ 693036
 • K6 + 6 Str - ரூ 699456
 • K8 5 Str - ரூ 730441
 • K8 6 Str - ரூ 736862
 • K8 6 Str Dual Tone - ரூ 744362

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய பனி விளக்குகள், புதிய பாடி கிளாடிங், புதிய ஸ்கிட் பிளேட், பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய பின்புற விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 15 இன்ச் மெஷின் கட் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய ஏழு இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் mFALCON எனும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் மாடல் 82bhp (5500 rpm) திறனும் 115Nm (3500-3600rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 25.32 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 77bhp (3750 rpm) திறனும் 190Nm (1750-2250rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.15 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் AMT ட்ரான்ஸ்மிஷனில் வெளியிடப்படவில்லை அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.