ஒரு மாதத்தில் 21,000 முன்பதிவுகளை பெற்றது மகிந்திரா KUV100

கடந்த மாதம் மகிந்திரா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட KUV100 மாடல் ஒரு மாதத்தில் 21,000 க்கும் மேலான முன்பதிவுகளை பெற்று அசத்தியுள்ளது என மகிந்திரா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 1.75 லட்சம் பேருக்கு மேலானோர் இந்த மாடல் தொடர்பாக விசாரணை செய்துள்ளதாகவும் 27 லட்சம் பேர் இதன் இணைய தளத்தை பார்த்துள்ளதாகவும் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒரு ஹேட்ச் பேக் கார் விருப்புவோருக்கு இந்த மாடல் சிறந்த மாற்றாக அமைந்துள்ளது. SUV மாடல் போன்ற தோற்றம், சிறப்பான இட வசதி, ஆறு பேர் வரை அமரக்கூடிய இருக்கை, ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மற்றும் சிறந்த டிசைன் போன்றாவை இந்த மாடலை வெற்றி பெற்ற மாடலாக மாற்றியுள்ளது. மேலும் தற்போது SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருப்பதும் இந்த மாடலின் வெற்றிக்கு ஒரு காரணமாக கூறலாம்.

இந்த மாடல் 1.2 லிட்டர் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் மாடல் 82bhp (5500 rpm) திறனும் 115Nm (3500-3600rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 25.32 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 77bhp (3750 rpm) திறனும் 190Nm (1750-2250rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.15 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் 24 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, கிரே, ப்ளூ, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.