சுப்ரோ வேன் மாடலை வெளியிட்டது மகிந்திரா நிறுவனம்

மகிந்திரா நிறுவனம் மாருதி சுசுகி - ஆம்னி மாடலுக்கு போட்டியாக சுப்ரோ வேன் மாடலை 4.38 லட்சம் (தானே) ஷோ ரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் BSIII மாசு கட்டுபாட்டில் மட்டுமே கிடைக்கும். 

இந்த மாடல் 909 cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 45 bhp திறனையும் 23.5 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும். இது 5 மற்றும் 8 என இரண்டு வித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் LX , VX மற்றும் ZX என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். இதன் ZX வேரியண்டில் பவர் ஸ்டீரிங் மற்றும் குளிரூட்டி ஆகிய இரண்டும் கிடைக்கும்.

மேலும் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுப்ரோ மேக்ஸி ட்ரக் மாடலையும் வெளியிட்டுள்ளது மகிந்திரா நிறுவனம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.