2019 ஆம் ஆண்டு வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட TUV300, எலெக்ட்ரிக் KUV100 மற்றும் KUV100 AMT

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட TUV300, எலெக்ட்ரிக் KUV100 மற்றும் KUV100 AMT மாடல்களை 2019 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

மஹிந்திரா TUV300 மாடல் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலிருந்து எந்த ஒரு மாறுதலும் இதுவரை செய்யப்படவில்லை. இதன் மேம்படுத்தப்பட்ட மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  AMT கியர் பாக்சுடன் கூடிய KUV100 மாடலும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும், இந்த மாடல் தற்போது தான் மேம்படுத்தப்பட்டதால் தோற்றத்தில் மாற்றங்கள் இருக்காது. இந்த மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. 

இத்துடன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் KUV100 மாடலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே e2o மற்றும் e-வெரிட்டோ மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.