ராக்ஸார் ஆப்ரோடு மாடலை அமெரிக்காவில் வெளியிட்டது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் புதிய ராக்ஸார் ஆப்ரோடு மாடலை அமெரிக்க சந்தையில் வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் டெட்ராய்ட், மிச்சிகன் பகுதியில் தனது தொழிற்சாலையை திறந்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா நார்த் அமெரிக்கா 'MANA' எனும் நிறுவனத்தின் கீழ் இந்த புதிய ராக்ஸார் ஆப்ரோடு மாடலை வெளியிட உள்ளது. இந்த மாடல் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தார் மாடலின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ராக்ஸார் மாடல் சாலைகளில் இயக்கக்கூடிய மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் தோற்றத்தில் அப்படியே தார் மாடல் போலவே உள்ளது. மேலும் இந்த மாடலில் பெரும்பாலும் ஸ்டீல் பாகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. டேஷ் போர்டு முதல் கொண்டு ஸ்டீல் கொண்டு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 4 சிலிண்டர் கொண்ட 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 62 bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் டீலர்ஷிப் மூலம் வெளியிடப்பட்டது, அதற்க்கு பதிலாக பவர் ஸ்போர்ட் டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த மாடல் 15,000 அமெரிக்க டாலர் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.