ரூ.14.21 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மகிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் சிறப்பு பதிப்பு

மகிந்திரா நிறுவனம் ரூ.14.21 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் ஸ்கார்பியோ அட்வென்ச்சர் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் 1000 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கார்பியோவின் S10 வேரியண்டில் மேலும் கூடுதலாக சில உபகரணங்களை பொருத்தி இந்த சிறப்பு பதிப்பு மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணம், அட்வென்ச்சர் தீம் டீக்கேல், கன் மெட்டல் அலாய், தோல் இருக்கை, புதிய பின்புற விளக்குகள், இன்டிகேடருடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடி மற்றும்  பின்புற பார்கிங் கேமரா ஆகியாவை கூடுதலாக இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 2.2 லிட்டர் mHawk  டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இது 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடல் இரண்டு மற்றும் நான்கு வில் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோ ரூம் விலை விவரம்:
Scorpio Adventure 2WD - Rs.14,21,559
Scorpio Adventure 4WD - Rs.15,42,765 

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ அட்வென்ச்சர் சிறப்பு பதிப்பு மாடலை ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.