ரூ 9.94 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ மாடலை ரூ 9.94 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் அதிக செயல்திறன் கொண்ட எஞ்சின், புதிய ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • அதிக திறன் (103 kW (140 BHP) மற்றும் 320 Nm) கொண்ட எஞ்சின் ஆனால் இந்த எஞ்சின் S7 மற்றும் S11 வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • புதிய ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
  • புதிய முகப்பு கிரில்
  • புதிய இருக்கை கவர்
  • புதிய ஐந்து ஸ்போக் அலாய்
  • புதிய டைனமிக் அசிஸ்ட் உடன் கூடிய ரிவர்ஸ் கேமரா  
  • புதிய பின்புற வடிவமைப்பு
  • புதிய சிவப்பு நிற பின்புற விளக்குகள்
  • புதிய சைடு இண்டிகேட்டர் உடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடி
  • புதிய பிரேக் சிஸ்டம் 

இந்த மாடல் 2.5 லிட்டர் m2DICR டீசல் என்ஜின் மற்றும்  2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சினில் இரண்டு வித திறன்களில் கிடைக்கும். 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 75 bhp (3200 rpm) திறனும் 200Nm (1400-2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் மாடல் 120 bhp (4000 rpm) திறன்  280Nm (1800-2800rpm) இழுவைத்திறன் மற்றும் 140 bhp (3750 rpm) திறன் மற்றும் 320Nm (1500-2800rpm) இழுவைத்திறன் என இரண்டு விதங்களில் கிடைக்கும். தற்போதும் இதன் பேஸ் வேரியன்ட் (S3) 2.5 லிட்டர் m2DICR டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் புதிய 140 bhp திறன் கொண்ட எஞ்சின் மாடல் மட்டும் புதிய ஆறு ஸ்பீட் மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் மற்ற மாடல்கள் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • S3 75 - 2WD - ரூ 9,94,470
  • S5 120 - 2WD - ரூ 11,78,029
  • S7 120 - 2WD - ரூ 12,77,145
  • S7 140 - 2WD - ரூ 13,07,145
  • S11 140 - 2WD - ரூ 14,97,642
  • S11 140 - 4WD - ரூ 16,23,114

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.