7.13 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மகிந்திரா TUV 300

புத்தம் புதிய மகிந்திரா TUV 300 எனும் காம்பேக்ட் SUV  7.13 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் சென்னையில் உள்ள மகிந்திரா ரிசர்ச் வேலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மாடல் 7 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் சிவப்பு ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.இதன் டீசல் என்ஜின் 1493CC கொள்ளளவு கொண்டது. தன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  டீசல் என்ஜின் மாடல் 84bhp (3750 rpm) திறனும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல் 81bhp (3750 rpm) திறனும் மேலும் இதன் இரண்டு மாடலும்  230Nm (1500-2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் மற்றும் ஆன் ரோடு விலை மற்றும் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=13&car_model=110

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.