இரட்டை வண்ணத்தில் வெளியிடப்பட்டது மஹிந்திரா TUV300

பண்டிகை காலங்களில் அனைத்து நிறுவங்களும் புதிய மாடல்களையும், மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அல்லது சிறப்பு பாதிப்பு மாடல்களையும் வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நிறைய புது மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மஹிந்திரா நிறுவனம் இரட்டை வண்ணத்தினாலான TUV300 மாடலை பண்டிகை காலத்தை ஒட்டி வெளியிட்டுள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் 101 Bhp  திறன் கொண்ட T8 மேனுவல் வேரியண்டில் மட்டும் இந்த இரட்டை வண்ண மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கிடைக்கும் ப்ளூ, சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, சில்வர், கருப்பு மற்றும் பச்சை என அனைத்து வண்ணத்திலும் இந்த இரட்டை வண்ண கலவை கிடைக்கும். மற்ற வேரியண்ட்டுகளுக்கு இந்த இரட்டை வண்ணத்தை மஹிந்திரா ஆக்சஸரீஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் mHawk  டீசல் என்ஜினில் 84Bhp மற்றும் 101Bhp திறனுடன் கிடைக்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.